வட்டக்கச்சி முருகன் கோவில்!

வட்டக்கச்சி ஆறுமுகம்வீதி அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி கிராமத்தில் ஆறுமுகம் வீதியில் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் முருகனின் வேல் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. பரிவார தெய்வங்களாக விநாயகர், நவக்கிரக மூர்த்திகள் மற்றும் வைரவர் போன்ற தெய்வங்கள் விளங்குகின்றன. உற்சவ மூர்த்திகளாக வள்ளி, தேவயானை சமேத சுப்பிரமணியரும், வள்ளிதேவயானை சமேத ஆறுமுகப்பெருமானும் இருக்கின்றபோதிலும் ஆலய தேர் திருவிழா மற்றும் சூரன் போர் ஆகிய உற்சவங்களுக்கே ஆறுமுகப்பெருமான் எழுந்தருளுவது குறிப்பிடத்தக்கது.

மகோற்சவம்
ஆலய மகோற்சவமானது ஆனி மதத்தில் வரும் பௌர்ணமி நாளை பத்தாவது நாள் தீர்த்த திருவிழாவாக கொண்ட பதினொரு நாட்களாகும். முதல்நாள் கொடியேற்றம், ஏழாம் நாள் வேட்டைத் திருவிழா, எட்டாம்நாள் சப்பறம், ஒன்பதாம் நாள் தேர் உற்சவம், பத்தாம் நாள் தீர்த்தம், பதினோராம் நாள் பூங்காவனம் (திருக்கலியாணம்) ஆகியன இங்கே சிறப்பாக இடம்பெறும் திருவிழாக்களாகும்.

அதேவேளை கந்த சஷ்டி இவ்வாலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெறும். இப்பிரதேச மக்களில் பலர் இவ்வாலயத்திலேயே விரதத்தினை அனுட்டிப்பர். அதேவேளை கந்தசஷ்டியின் இறுதிநாளன்று இடம்பெறும் சூரன் போர் விழாவும் சிறப்பாக இடம்பெறுவதுடன் மறுநாள் பாரணை தினத்தன்று இரவு திருக்கலியாண உற்சவமும் சிறப்பாக இடம்பெறும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. 
wikipedia.org

https://goo.gl/maps/oUqaCVPbyuC2

Muruhan Kovil
Arumuham Rd, Vaddakkachchi, Sri Lanka