வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில்

வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இங்கு இருபோக நெற்செய்கை (சிறுபோகம்,பெரும்போகம்) நடைபெறுகிறது. தெங்குப் பயிர்ச்செய்கையும் இங்கு முக்கியமானது.

கால்நடை வளர்ப்பும், வீட்டுத்தோட்ட பயிர்செய்கையும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

இங்கு நடைபெறும் சிறுபோக நெற்செய்கை இலங்கையின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கம் என்று கூறப்படும் இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து செய்யப்படும் நீர்ப்பாசனத்தின் மூலமும், பெரும்போக நெற்செய்கை மழையை நம்பியும் மேற்கொள்ளப்படுகின்றது.

பருவமழை அற்ற காலங்களில் சிறு நீர்நிலைகள் மூலமும் நீரை பெற்று வேளாண்மை செய்யப்படுகின்றது.
wikipedia.org