அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டிச் சவாரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த போட்டி நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் அக்கராயன் சவாரித் திடலில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து 78 ஜோடிகள் இன்றைய போட்டியில் பங்கு பற்றியிருந்ததுடன், அ, ஆ, இ, ஈ பிரிவுகள் என போட்டிகள் இடம்பெற்றன.
தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள், கலை, கலாசார விழுமியங்கள் அழிவடைந்து வரும் இக்காலப்பகுதியில், 50 வருடங்களிற்கு மேலான பாரம்பரியத்தினைக் கொண்ட மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியினை அழியவிடாது பாதுகாக்க குறித்த அமைப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் குறித்த சவாரிப் போட்டிக்கு இடத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையிலும், சவாரி திடல்கள் வழங்கப்படவில்லை என போட்டி ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கதாகும்.
குறித்த போட்டியில் வெற்றிபெற்ற குழுக்களின் விபரங்கள் வருமாறு,
‘அ’ பிரிவில் –
முதலாமிடம் – அளவெட்டி
இரண்டாம் இடம் – மட்டுவில்
மூன்றாம் இடம் – வட்டக்கச்சி
‘ஆ’ பிரிவில் –
முதலாமிடம் – வட்டக்கச்சி
இரண்டாம் இடம் – அளவெட்டி
மூன்றாம் இடம் – அச்செழு
‘இ’ பிரிவில் –
முதலாமிடம் – அளவெட்டி
இரண்டாம் இடம் – வட்டக்கச்சி
மூன்றாம் இடம் – வட்டுக்கோட்டை
‘ஈ’ பிரிவில் –
முதலாமிடம் – மட்டுவில்
இரண்டாம் இடம் – அளவெட்டி
மூன்றாம் இடம் – வட்டுக்குhட்டை
‘உ’ பிரிவில் –
முதலாமிடம் – ரெட்பானா
இரண்டாம் இடம் – முரசுமோட்டை
மூன்றாம் இடம் – அளவெட்டி ஆகிய இடங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.