கிளிநொச்சி – வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைர விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று மாலை கல்லூரி அதிபர் பூலோகராசா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்.குயின்ரஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் கௌரவ விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் அதிபரும் வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வட மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர்.
மேலும், இதில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிளிநொச்சி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.