வட்டக்கச்சி மத்திய கல்லூரி!
இயற்கை எழில்மிகு வட்டக்கச்சி கிராமத்தில் 1954ஆம் ஆண்டு யா/ இராமநாதபுரம் தெற்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை என்ற நாமத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை காலத்துக்கு காலம் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று வட்டக்கச்சி மத்திய கல்லூரி எனும் பெருமையோடு 65 வருடங்களை கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறது…
“கேடில் விழுச்செல்வம் கல்வி” எனும் மகுட வாசகத்தை தாங்கிய இக்கல்லூரி 1980ஆம் ஆண்டு யா/வட்டக்கச்சி மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு க.பொ.த உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு முதல் க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவும் 1993 ஆண்டு க.பொ.த உயர்தர விஞ்ஞான, கணித பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதே ஆண்டில் 1AB 1ஆம் தரப் பாடசாலையாகத் தர உயர்வை பெற்றுக்கொண்டது…
2013 ஆம் ஆண்டு ஆயிரம் பாடசாலைகள் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு வட்டக்கச்சி மத்திய கல்லூரியாக தர உயர்வை அடைந்திருக்கிறது.
தற்போது 588 மாணவர்களையும் 39 ஆசிரியர்களோடும் சிறப்பாக இயங்கி வருகிறது…
தொடர்புக்கு (பாடசாலை அதிபர் S.பூலோகராஜா) :- 0094770879277
Vaddakkachchi.com
#Vaddakkachchi #வட்டக்கச்சி