வட்டக்கச்சி சூசையப்பர் தேவாலயம்!

1953ஆம் ஆண்டு கொலனி குடியேற்றத்திட்டமான கட்சன் வீதிக்கு உட்பட்ட பகுதிகள் குடியேற்றம் செய்யப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் கிறிஸ்தவ மக்களை ஒன்றிணைத்து நல்வழிப்படுத்தும் நோக்கில் அருட் தந்தை சூசைநாதர், அருட் தந்தை செல்வரட்னம் ஆகிய இருவரும் இணைந்து கிறிஸ்தவக் குடும்பங்களாகிய மரியநாயகம், வஸ்தியாம்பிள்ளை, யோசேப்பு ஆகியோரின் இல்லங்களில் செபவழிபாடுகளை நடத்தினார்கள்…

அதன்பின்னர் அருட்தந்தை சூசைநாதரும், அருட்தந்தை செல்வரட்னமும் இணைந்து கிறிஸ்தவர்களின் உதவியுடன் தற்போது ஆலயம் உள்ள பகுதியில் சிறு கொட்டில் அமைத்து வழிபட்டு வந்தனர்…

1962ம் ஆண்டளவில் சூசையப்பர் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட காணியில் சிறியளவிலான ஆலயம் அமைக்கப்பட்டு அங்கு திருப்பலி பூசைகள் நடைபெற்றது…
அந்த காலப்பகுதியில் கிளிநொச்சி பங்குடனே வட்டக்கச்சியும் இணைக்கப்பட்டு இயங்கி வந்தது…

2009ம் ஆண்டு நடந்த போர்ச்சூழலில் புனித சூசையப்பர் ஆலயம் எவ்வித சேதங்களுக்கும் உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்……

Vaddakkachchi.com
#Vaddakkachchi #வட்டக்கச்சி