வட்டக்கச்சி சிவன் கோவில்!

வட்டக்கச்சி சிவன் கோவில்!

வட்டக்கச்சி மாயவனூர் கிராமத்தில் அமைந்திருக்கும் இச் சிவன் கோவில் மிகப் பழமையானது…

வட்டக்கச்சி பிரதேசத்தில் பல்வேறு கோவில்கள் காணப்பட்டாலும் வட்டக்கச்சியில் காணப்படும் ஒரே ஒரு சிவன்கோவில் இது ஒன்றே ஆகும்….

மாயவனூர் வித்தியாலயத்திற்கு மிக அருகாமையில் இச் சிவன் ஆலயம் அமைந்திருக்கிறது…

மாதேவி ஈஸ்வர் சமேதராக அருளாட்சிபுரிந்து கொண்டிருக்கும் இவ் ஆலயம் யுத்தத்தின் பின்னர் கடுமையான அழிவுகளை சந்தித்து பாரியளவில் சேதங்களை எதிர்கொண்டிருக்கிறது…

ஊர் மக்களின் நிதி உதவியில் சிறிது சிறிதாக கட்டப்பட்டு மீளுருவாக்கம் பெற்றுவருகின்றது….