வட்டக்கச்சி இளங்கதிர் சனசமூக நிலையம்
இளங்கதிர் சனசமூக நிலையம் வட்டக்கச்சி பிரதேசம் ஆரம்பிக்கும் பகுதியில் சிவிக்சென்ரர் கிராம அலுவலர் பிரிவில் காணப்படும் ஒரு சனசமூக நிலையம் ஆகும்.
வட்டக்கச்சி பண்ணைக்கு மிக அருகில் வட்டக்கச்சியின் பிரதான பாதையின் அருகே இந்த சனசமூக நிலையம் காணப்படுகிறது.
போரின் வடுக்களை சுமந்தவாறு தற்போது காணப்படும் இச் சனசமூக நிலையம் 2009க்கு முற்பட்ட காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிய கிளிநொச்சியின் பிரபலமான சனசமூக நிலையமாக காணப்பட்டது.
தற்போது இயங்குநிலை இன்றி மூடப்பட்டே காணப்படுகிறது. அதற்கு குறித்த பிரதேசத்தில் போரின் பின்னர் ஏற்பட்ட சனச்செறிவின் குறைவே முக்கிய காரணம் என ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்.