இலங்கையில் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு குளம் காணப்படுகின்றது.
கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் இரணைமடு என்ற பெயர் வந்தது.
1980கள் முதல் 2009 வரை இடம்பெற்ற போர்ச் சூழ்நிலை கிளிநொச்சி மக்களின் இடம்பெயர்வுக்கு காரணமானது.
யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தனர்.
இதனால் இரணைமடுக் குளம் சிதைவடைந்தன. இருக்கும் வளங்களைக் கொண்டே இயலுமான பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 1990 அளவில் சிதைவடைந்த இந்த நீர்த்தேக்கம் மீளவும் இயங்கவில்லை.
அதன் பின்னர் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் விளைவாகவும் இரணைமடு குளத்தின் கீழான 22 கமக்கார அமைப்புக்களும் 7000திற்கு மேற்பட்ட விவசாயிகளின் இடைவிடாத கோரிக்கையையும் ஏற்று, இலங்கை அரசாங்கம் நிதி வழங்கும் நிறுவனங்களிடம் கேட்டதற்கிணங்க இப்பாரிய திட்டம் முன்னெடுக்கப்பபட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையும் இடைநிறுத்தப்பட்டு வேலைத்திட்டம் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினது இலகுகடன் திட்டத்தின் கீழ் குளக்கட்டு இரண்டு அடியால் உயர்த்தி நீர் கொள்ளளவை கூட்டுவதற்கான திட்ட வரைபும் அதனுடன் இணைந்த ஏனைய கட்டுமானங்களும் வான், பாலம் அமைப்பு வேலைகளும் திருவையாறு ஏற்று நீர்ப்பாசன வேலைகளும் சுமார் 2000 மில்லியன் பெறுமதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1921ஆம் ஆண்டு கட்டப்பட்ட குறித்த குளத்தின் அதிகபட்ச நீளம் 6 mi (10 km)2, அதிகபட்ச அகலம் 1 mi (2 km)2 மற்றும் அதிகபட்ச ஆழம் 34 ft (10 m)2 ஆகும்.
இந்த குளம் 1983ஆம் ஆண்டுக்கு பின் அதாவது, 35 ஆண்டுகளுக்கு பின் இவ்வாண்டிலேயே 33 அடிக்கு மேற்பட்ட தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக வடக்கின் பொக்கிஷமாக விளங்கும் இரணைமடு குளத்தின் அழகிய காட்சிகள் வெளிவந்துள்ளன.