பேராதரவை நாடிநிற்கும் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில்!

வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில்

கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புக்களோடு நேரந்தவறாத பூசைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன.

இவ் ஆலயத்தில் இறைவன் கருங்கல்லால் சிறப்பாக அமைக்கப்பட்ட மூலஸ்தானத்தில் நின்ற கோலத்திலும் ஸ்ரீரங்க விமானத்தையுடைய மண்டபத்தில் சயனக்கோலத்திலும் சேவை சாதிக்கின்றார்.

இவ்வாலயத்தில் தெற்கு நோக்கிய இரண்டு கோபுரங்களும் பிரதான வாயிலில் மொட்டைக்கோபுரமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஞாயிறும் விஷேட உற்சவமும் ஆவணிக் கிருஷ்ணஜெயந்தியைத் தேராகக் கொண்ட 12 நாட்கள் பிரமோற்சவமும், மார்கழி தமிழ்மாதம் முழுவதும் அலங்காரத்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

இவ் ஆலயத்தில் 2002ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதன் காரணமாக 2014ஆம் ஆண்டு குடமுழுக்கு நிறைவேற்ற வேண்டியது ஆகம விதியாகும். இவ்விடைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல திருப்பணிகள் முடிவடையாதுள்ளன. அவற்றில் முக்கியமானவை:-

1) அன்னதானமடம்
2) அறநெறிப்பாடசாலை
3) ஆலய உள்வீதி ஒருபகுதி மேற்கூரை வேலை
4) மூலஸ்தான ஸ்தூபி திருத்த வேலை
5) ஆலயத்திற்கான வர்ணம் பூசுதல்
6) சிறு சிறு திருத்த வேலைகள்
7) ஆலய உள்வீதி நில வேலை

மேற்படி திருப்பணிகள் நிறைவேறும் பட்சத்தில் இவ்வாலயமானது ஒரு கலைக்கோவிலாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

இவ் வேலைகளைத் தனித்தோ கூட்டாகவோ ஒவ்வொரு மக்களும் பொறுப்பெடுத்து ஆற்றி கண்ணனின் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற ஒத்துழைக்கும் வண்ணம் அன்புடன் கேட்டு நிற்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர்.

தங்களின் நிதியை நேரிலோ அல்லது ஆலய வங்கி கணக்கிற்கோ அனுப்பலாம்…

ஆலய கணக்கு இலக்கம் :- 70274368
இலங்கை வங்கி, கிளிநொச்சிக் கிளை (BOC)

தொடர்புகளுக்கு :- 0094775511213
0094777906453