வட்டக்கச்சி பொதுச்சந்தை!
வட்டக்கச்சி பொதுச்சந்தை
அறிவொளி சனசமூக நிலையம்!
அறிவொளி சனசமூக நிலையம்! வட்டக்கச்சி சில்வா வீதி சந்தியில் அமைந்திருக்கும் அறிவொளி சனசமூக நிலையமே தற்போது வட்டக்கச்சியில் இயங்கு நிலையில் இருக்கும் ஒரே ஒரு சனசமூக நிலையமாகும்… யுத்தத்தின் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இச் சனசமூக நிலையம் காணப்படுகிறது… தற்போது இச் சனசமூக நிலைய காணியில் ஒரு முன்பள்ளியும் அமைந்திருக்கிறது.. இதனால் பல சிறார்கள் முன்பள்ளிக் கல்வியை பயின்று முன்னேறுகின்றார்கள்.. தொடர்புக்கு :- 0094779727975 Vaddakkachchi.com #Vaddakkachchi #வட்டக்கச்சி
வட்டக்கச்சி புழுதியாற்றுக் குளம்!
புழுதியாற்றுக் குளம்! வட்டக்கச்சி மண்ணில் காணப்படும் மிகப்பெரிய குளங்களில் இதுவும் ஒன்று… இக்குளம் வட்டக்கச்சி மாயவனூர் பிரதேசத்தில் முடிவிடத்தில் இரணைமடு காட்டை அண்டிய பிரதேசத்தில் காணப்படுகிறது. இந்தக்குளத்தின் ஏற்றுநீர்ப்பாசனத்தை நம்பியே தற்போது மாயவனூர் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன… அன்மைய தகவலின் படி ஏற்றுநீர்ப்பாசனத்திற்கு அதிகளவு எரிபொருள் செலவாவதால் இக்குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்வதை பலர் கைவிட்டுள்ளனர். சோலர் மின்கலம் ஒன்றை பொருத்தினால் அதன் மூலம் மின்சாரத்தை பெற்று எரிபொருள் செலவை குறைத்து அதிக இலாபமீட்டலாம் என்கின்றனர் […]
வட்டக்கச்சி மம்மில் பொது மயானம்!
வட்டக்கச்சி மம்மில் பொது மயானம்!
வட்டக்கச்சி மம்மில் குளம்!
வட்டக்கச்சி மம்மில் குளம்! வட்டக்கச்சி கிராமத்தில் காணப்படும் முக்கிய குளங்களில் ஒன்றாக மம்மில் குளம் காணப்படுகிறது… வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயத்தின் தீர்த்தமாக இக்குளம் காணப்படுகின்றது… இக் குளத்தின் ஒரு புறத்தில் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயமும் மற்றுமொருபுறத்தில் நாகதம்பிரான் ஆலயமும் காணப்படுகிறது…. இக்குளம் விவசாயக் குளமாக இல்லாவிட்டாலும் வட்டக்கச்சி, மாயவனூர் மக்களின் நீர் தேவையை நிவர்த்தி செய்யும் ஒரு முக்கிய குளமாக உள்ளது… இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மருதமரங்கள், நாவல் மரங்கள் புடைசூழ மிக […]
வட்டக்கச்சி இளங்கதிர் சனசமூக நிலையம்!
வட்டக்கச்சி இளங்கதிர் சனசமூக நிலையம் இளங்கதிர் சனசமூக நிலையம் வட்டக்கச்சி பிரதேசம் ஆரம்பிக்கும் பகுதியில் சிவிக்சென்ரர் கிராம அலுவலர் பிரிவில் காணப்படும் ஒரு சனசமூக நிலையம் ஆகும். வட்டக்கச்சி பண்ணைக்கு மிக அருகில் வட்டக்கச்சியின் பிரதான பாதையின் அருகே இந்த சனசமூக நிலையம் காணப்படுகிறது. போரின் வடுக்களை சுமந்தவாறு தற்போது காணப்படும் இச் சனசமூக நிலையம் 2009க்கு முற்பட்ட காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிய கிளிநொச்சியின் பிரபலமான சனசமூக நிலையமாக காணப்பட்டது. தற்போது இயங்குநிலை இன்றி மூடப்பட்டே […]
வட்டக்கச்சி சிவன் கோவில்!
வட்டக்கச்சி சிவன் கோவில்! வட்டக்கச்சி மாயவனூர் கிராமத்தில் அமைந்திருக்கும் இச் சிவன் கோவில் மிகப் பழமையானது… வட்டக்கச்சி பிரதேசத்தில் பல்வேறு கோவில்கள் காணப்பட்டாலும் வட்டக்கச்சியில் காணப்படும் ஒரே ஒரு சிவன்கோவில் இது ஒன்றே ஆகும்…. மாயவனூர் வித்தியாலயத்திற்கு மிக அருகாமையில் இச் சிவன் ஆலயம் அமைந்திருக்கிறது… மாதேவி ஈஸ்வர் சமேதராக அருளாட்சிபுரிந்து கொண்டிருக்கும் இவ் ஆலயம் யுத்தத்தின் பின்னர் கடுமையான அழிவுகளை சந்தித்து பாரியளவில் சேதங்களை எதிர்கொண்டிருக்கிறது… ஊர் மக்களின் நிதி உதவியில் சிறிது சிறிதாக கட்டப்பட்டு […]
வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி பழமையான பஸ் தரிப்பிடம்!
வட்டக்கச்சி முருகன் கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் பழமையான பஸ் தரிப்பிடம்!
வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலை!
வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலை!
வட்டக்கச்சி பொது நூலகம்!
வட்டக்கச்சி பொது நூலகம்!
வட்டக்கச்சி ஐயப்பன் கோவில்!
வட்டக்கச்சியின் கிழக்கு பகுதியில் ஆலமரத்தின் அடியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோவிலே வட்டக்கச்சி ஐயப்பன் கோவிலாகும்… கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்… சில்வா வீதி சந்தியில் இருந்து மாவடியம்மன் கோவில் நோக்கி பயணிக்கும் பாதையில் இக் கோவில் அமைந்துள்ளது…
கிளி/ வட்டக்கச்சி தெற்கு அ.த.க.பாடசாலை!
கிளி/ வட்டக்கச்சி தெற்கு அ.த.க.பாடசாலை! பாடசாலையின் தற்போதைய நிலை. வட்டக்கச்சி பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பாடசாலைகளில் இதுவும் ஒன்று. இரணைமடு குளக்கட்டின் கீழ் காணப்படும் இப் பாடசாலை தரம் 5 வரை கல்வி கற்கும் மாணவர்களை கொண்டுள்ளது… போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் தற்போது இப்பாடசாலை காணப்படுகிறது… தொடர்புக்கு (பாடசாலை அதிபர் வசந்தி மகாலிங்கம்) :- 0094778057376
வட்டக்கச்சி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்!
வட்டக்கச்சி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்!
வட்டக்கச்சி முஸ்லீம் பள்ளிவாசல்!
வட்டக்கச்சி முஸ்லீம் பள்ளிவாசல்! வட்டக்கச்சி சந்தை பகுதியில் இவ் பள்ளிவாசல் அமைந்துள்ளது. போரின் முன்னர் வட்டக்கச்சி காவல்துறை அமைந்திருந்த காணியில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது. போர் முடிவடைந்து 2009 இற்கு பின்னர் மீள்குடியேறிய ஒரு சில முஸ்லீம் மக்களின் தொழுகைக்காக இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது.
வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி! – 2019
வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த மெய்வன்மை போட்டி 31/01/2019 வியாழக்கிழமை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ச.பூலோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், முந்நாள் ஆசிரியரும் தற்போதைய யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் இ.கிருஷ்ணலிங்கம் அவர்களும் நோர்வேயிலிருந்து வருகைதந்திருந்த கல்லூரியின் பழைய மாணவன் வே.நகுலநந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களோடு சிறப்பு […]