மகுடமாய் திகழும் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்!

கிளி / வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்! வட்டக்கச்சி பிரதேசத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரபலமான ஆரம்ப பாடசாலை வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகும். இது வட்டக்கச்சி மத்திய கல்லூரிக்கு மிக அருகிலும் வட்டக்கச்சி தபால் கந்தோர், வட்டக்கச்சி வைத்தியசாலைக்கு அருகில் எழில் கொஞ்சும் வட்டக்கச்சி பிரதேசத்தில் அழகாக அமைந்திருக்கிறது. தொடர்புகளுக்கு… அதிபர் பங்கயற்செல்வன் :- 0094772395778

வட்டக்கச்சி சூசையப்பர் தேவாலயம்!

1953ஆம் ஆண்டு கொலனி குடியேற்றத்திட்டமான கட்சன் வீதிக்கு உட்பட்ட பகுதிகள் குடியேற்றம் செய்யப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் கிறிஸ்தவ மக்களை ஒன்றிணைத்து நல்வழிப்படுத்தும் நோக்கில் அருட் தந்தை சூசைநாதர், அருட் தந்தை செல்வரட்னம் ஆகிய இருவரும் இணைந்து கிறிஸ்தவக் குடும்பங்களாகிய மரியநாயகம், வஸ்தியாம்பிள்ளை, யோசேப்பு ஆகியோரின் இல்லங்களில் செபவழிபாடுகளை நடத்தினார்கள்… அதன்பின்னர் அருட்தந்தை சூசைநாதரும், அருட்தந்தை செல்வரட்னமும் இணைந்து கிறிஸ்தவர்களின் உதவியுடன் தற்போது ஆலயம் உள்ள பகுதியில் சிறு கொட்டில் அமைத்து வழிபட்டு வந்தனர்… 1962ம் ஆண்டளவில் சூசையப்பர் […]

பேராதரவை நாடிநிற்கும் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில்!

வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புக்களோடு நேரந்தவறாத பூசைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவ் ஆலயத்தில் இறைவன் கருங்கல்லால் சிறப்பாக அமைக்கப்பட்ட மூலஸ்தானத்தில் நின்ற கோலத்திலும் ஸ்ரீரங்க விமானத்தையுடைய மண்டபத்தில் சயனக்கோலத்திலும் சேவை சாதிக்கின்றார். இவ்வாலயத்தில் தெற்கு நோக்கிய இரண்டு கோபுரங்களும் பிரதான வாயிலில் மொட்டைக்கோபுரமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிறும் விஷேட உற்சவமும் ஆவணிக் கிருஷ்ணஜெயந்தியைத் தேராகக் கொண்ட 12 […]

மிகப்பெரிய வட்டக்கச்சி விவசாயப் பண்ணை!

வட்டக்கச்சி விவசாயப் பண்ணை! வட்டக்கச்சி விவசாயப் பண்ணை 1951 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 420 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பண்ணை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இலங்கையின் இரண்டாவது பெரிய பண்ணையாக காணப்பட்டது. வட்டக்கச்சி விவசாயப் பண்ணை தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் 26 ஏக்கரில் விவசாயப் பாடசாலையையும், மிகுதி 394 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விதை, மறு வயல் பயிர்கள் உற்பத்தி பண்ணையாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணையாகவும் செயற்பட்டது. வட்டக்கச்சி விவசாயப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள […]