அறிவொளி சனசமூக நிலையம்!
அறிவொளி சனசமூக நிலையம்! வட்டக்கச்சி சில்வா வீதி சந்தியில் அமைந்திருக்கும் அறிவொளி சனசமூக நிலையமே தற்போது வட்டக்கச்சியில் இயங்கு நிலையில் இருக்கும் ஒரே ஒரு சனசமூக நிலையமாகும்… யுத்தத்தின் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இச் சனசமூக நிலையம் காணப்படுகிறது… தற்போது இச் சனசமூக நிலைய காணியில் ஒரு முன்பள்ளியும் அமைந்திருக்கிறது.. இதனால் பல சிறார்கள் முன்பள்ளிக் கல்வியை பயின்று முன்னேறுகின்றார்கள்.. தொடர்புக்கு :- 0094779727975 Vaddakkachchi.com #Vaddakkachchi #வட்டக்கச்சி
வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி! – 2019
வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த மெய்வன்மை போட்டி 31/01/2019 வியாழக்கிழமை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ச.பூலோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், முந்நாள் ஆசிரியரும் தற்போதைய யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் இ.கிருஷ்ணலிங்கம் அவர்களும் நோர்வேயிலிருந்து வருகைதந்திருந்த கல்லூரியின் பழைய மாணவன் வே.நகுலநந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களோடு சிறப்பு […]
மகுடமாய் திகழும் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்!
கிளி / வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்! வட்டக்கச்சி பிரதேசத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரபலமான ஆரம்ப பாடசாலை வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகும். இது வட்டக்கச்சி மத்திய கல்லூரிக்கு மிக அருகிலும் வட்டக்கச்சி தபால் கந்தோர், வட்டக்கச்சி வைத்தியசாலைக்கு அருகில் எழில் கொஞ்சும் வட்டக்கச்சி பிரதேசத்தில் அழகாக அமைந்திருக்கிறது. தொடர்புகளுக்கு… அதிபர் பங்கயற்செல்வன் :- 0094772395778
வட்டக்கச்சி மத்திய கல்லூரி!
வட்டக்கச்சி மத்திய கல்லூரி! இயற்கை எழில்மிகு வட்டக்கச்சி கிராமத்தில் 1954ஆம் ஆண்டு யா/ இராமநாதபுரம் தெற்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை என்ற நாமத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை காலத்துக்கு காலம் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று வட்டக்கச்சி மத்திய கல்லூரி எனும் பெருமையோடு 65 வருடங்களை கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறது… “கேடில் விழுச்செல்வம் கல்வி” எனும் மகுட வாசகத்தை தாங்கிய இக்கல்லூரி 1980ஆம் ஆண்டு யா/வட்டக்கச்சி மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு க.பொ.த உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து […]