பேராதரவை நாடிநிற்கும் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில்!
வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புக்களோடு நேரந்தவறாத பூசைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவ் ஆலயத்தில் இறைவன் கருங்கல்லால் சிறப்பாக அமைக்கப்பட்ட மூலஸ்தானத்தில் நின்ற கோலத்திலும் ஸ்ரீரங்க விமானத்தையுடைய மண்டபத்தில் சயனக்கோலத்திலும் சேவை சாதிக்கின்றார். இவ்வாலயத்தில் தெற்கு நோக்கிய இரண்டு கோபுரங்களும் பிரதான வாயிலில் மொட்டைக்கோபுரமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிறும் விஷேட உற்சவமும் ஆவணிக் கிருஷ்ணஜெயந்தியைத் தேராகக் கொண்ட 12 […]