கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு – 16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரமாக அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.