கிளி/இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தற்போதைய நிலை…
1955 ஆண்டு 5ஆம் மாதம் 27 ஆம் திகதி வட்டக்கச்சி கிழக்கு இந்து அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்னும் திருநாமம் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை கிராம அலுவலர் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தபால் விநியோகத்தை இலகுவாக்கும் நோக்கத்தில் கிளி/ இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் பெற்றது….
தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களை கொண்டு காணப்படும் இப் பாடசாலையில் தற்போது 342 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அத்தோடு 23 நிரந்தர ஆசிரியர்களும் 4 தொண்டர் ஆசிரியர்களும் 3 கல்விசாரா உத்தியோகத்தர்களும் கடமையாற்றுகின்றனர்.
கல்வி, விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இப்பாடசாலை தேசியத்தில் உடற்பயிற்சி போட்டியில் 1ஆம் இடத்தை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்…
தொடர்புக்கு (பாடசாலை அதிபர் சுந்தரேஸ்வரன் சுதாஸ்கரன்) :- 0094772881132
Vaddakkachchi.com
#Vaddakkachchi #வட்டக்கச்சி