கர்நாடக மாநிலத்தில் ம.ஜ.த தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

  • கர்நாடக மாநிலத்தில் ம.ஜ.த தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ம.ஜ.த-க்கு முதல்வர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு 2 துணை முதல்வர் பதவியும் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
  • கர்நாடக மாநிலத்தில் தற்போது திடீர் திருப்பமாக ம.ஜ.த தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமைகோரி இன்று மாலை ஆளுநரைக் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திக்க உள்ளதாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
  • கர்நாடகத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய முதல்வர் சித்தராமையா, “கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதிக்கின்றோம். ம.ஜ.த தலைமையில் ஆட்சியமைக்க நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என்றார். இதே கருத்தை கர்நாடக மாநிலக் காங்கிரஸ் தலைவரும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.